அமெரிக்காவின் புதிய Visa Bond திட்டம்: பயணிகளுக்கு 15,000 டொலர் வரை பத்திரம் கட்டாயம்
அமெரிக்கா செல்லும் பயணிகளுக்கு 15,000 டொலர் வரை பத்திரம் (Bond) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா வரும் ஆகஸ்ட் 20, 2025 முதல் ஒரு வருடம் நடைமுறைக்கு வரும் புதிய பைலட் திட்டத்த்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், B1 (வணிகம்) மற்றும் B2 (சுற்றுலா) விசாக்கள் பெறும் விண்ணப்பதாரர்களிடம் $5,000, $10,000 அல்லது $15,000 வரை பத்திரம் (Visa Bond) கேட்கப்படும் என அறிவித்துள்ளது.
பொதுவாக $10,000 பத்திரம் முதலில் அமுலாக்கப்படும் என கூறப்பட்டு, விண்ணப்பதாரர் அமெரிக்காவில் தங்கும் விதிமுறைகளை பின்பற்றி நேரத்திற்கு முறையாக நாடு திரும்பினால், அந்த தொகை முழுமையாக திருப்பி வழங்கப்படும்.
யார் குறிவைக்கப்படுகிறார்கள்?
Chad, Eritrea, Haiti, Myanmar, Yemen மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் போன்ற, அதிக கூடுதல் தங்கும் விகிதங்கள் கொண்ட நாடுகள் அல்லது தரமான பரிசோதனை இல்லாத நாடுகள் விசா பாண்ட் திட்டத்தின் கீழ் முக்கியமாகக் குறிவைக்கப்படுகின்றன.
இந்த திட்டம் ட்ரம்ப் ஆட்சியில் 2020-ல் அறிவிக்கப்பட்டது, ஆனால் COVID-19 காரணமாக செயல்படவில்லை.
கூடுதல் கட்டண நடவடிக்கைகள்:
மேலும், பயணிகள் 250 டொலர் வரையிலான 'visa integrity fee' கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இது அக்டோபர் 1, 2025 முதல் அமுலுக்கு வரும். அமெரிக்கா விட்டு நேரத்திற்கு செல்லும் பயணிகளுக்கு இந்த கட்டணமும் திருப்பி வழங்கப்படும்.
இந்த முயற்சி, விசா முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அமெரிக்க அரசு மேற்கொள்ளும் கடுமையான குடியேற்ற நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US visa bond rule 2025, $15000 visa bond B1 B2, US immigration bond policy, Tourist visa bond USA, B1 B2 visa changes, Visa bond countries list, US Department of State visa rules, Visa integrity fee USA, Non-immigrant visa security bond, Overstay visa penalty USA