2 டொலருக்கான லொட்டறி சீட்டில் 1.8 பில்லியன் டொலர் பரிசை வென்ற நபர்
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் Powerball லொட்டறி சீட்டில் ஒருவர் 1.817 பில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார்.
அமெரிக்க வரலாற்றிலேயே
தொடர்ச்சியாக மூன்று மாதங்களில் எவரும் முதற்பரிசை வெல்லாத நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் அறிவிக்கப்பட்ட வெற்றி இலக்கங்களில் அந்த நபர் தெரிவாகியுள்ளார்.

வெற்றி இலக்கமாக 04, 25, 31, 52 மற்றும் 59 என லொட்டறி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்க வரலாற்றிலேயே லொட்டறியில் பெரும் தொகை வெல்லும் இரண்டாவது நபர் என்பதுடன், 2025ல் மிகப்பெரிய Powerball பரிசு இது என்றும் கூறப்படுகிறது.
வெற்றியாளருக்கு மொத்தமாக 834.9 மில்லியன் டொலர் தொகை கிடைக்க இருக்கிறது. தொடர்ந்து 46 குலுக்கல்களில் எவரும் ஆறு இலக்கங்களையும் சரியாக கணிக்காததைத் தொடர்ந்து இந்தப் பெருந்தொகை பரிசு தற்போது கிடைத்துள்ளது.
செப்டம்பர் 6 அன்று நடைபெற்ற குலுக்கலில், மிசூரி மற்றும் டெக்சாஸ் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் கடைசியாக 1.787 பில்லியன் டொலர் பரிசை வென்றனர்.
45 மாகாணங்களிலும்
ஆர்கன்சாஸில் விற்கப்பட்ட ஒரு டிக்கெட் மூலம் பவர்பால் ஜாக்பாட் வெல்லப்படுவது இது இரண்டாவது முறை என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கடைசியாக 2010-ல் ஒருவர் வென்றுள்ளார். கடந்த 2011ல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் கடைசியாக ஒருவர் பவர்பால் ஜாக்பாட்டை வென்றார் என்று பவர்பால் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிக்கெட்டுகளின் விலை 2 டாலர் ஆகும், மேலும் இந்த டிக்கெட்டுகள் அமெரிக்காவின் 45 மாகாணங்களிலும், வாஷிங்டன், டி.சி., புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் அமெரிக்க விர்ஜின் தீவுகளிலும் விற்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |