14 ஆண்டுகளாக கர்ப்பமாக இருக்கும் தாய்...இதுவரை 16 குழந்தைகள்: ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தம்பதி!
14 வருடங்களில் 16 குழந்தைகளை பெற்றெடுத்து அசத்திய கார்லோஸ் மற்றும் பாட்டி ஹெர்னாண்டஸ் ஜோடி.
மொத்தம் 20 குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புவதாக அமெரிக்க ஜோடி அறிவிப்பு.
அமெரிக்காவை சேர்ந்த கார்லோஸ்-பேட்டி ஹர்னாண்டஸ் தம்பதியினர் கடந்த 14 வருடங்களில் மொத்தம் 16 குழந்தைகளை பெற்றெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
மாறிவரும் வாழ்க்கை சூழ்நிலை மற்றும் உணவு பழக்கவழக்கத்தால் தற்போது உள்ள இளம் தம்பதியினர்களுக்கு ஒற்றை குழந்தையை பெற்றெடுப்பதே மிகுந்த சிரமமாக உள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வசிக்கும் கார்லோஸ் (Carlos) மற்றும் பாட்டி ஹெர்னாண்டஸ் (Patty Hernandez) என்ற தம்பதியினர் 14 வருடத்தில் சுமார் 16 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
அத்துடன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தம்பதியருக்கு 17வது குழந்தை பிறக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த ஜோடிக்கு பிறந்துள்ள 16 குழந்தைகளில் ஆறு ஆண்களும் பத்து பெண்களும் உள்ளனர், அதில் மூன்று செட் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்வென்றால், 16 குழந்தைகளுக்கும் தந்தையான கார்லோஸை பெறுமைப்படுத்தும் விதமாக அனைவரது பெயரையும் ஆங்கில எழுத்தான c-யில் தொடங்குமாறு பெயர் சூட்டியுள்ளனர்.
குழந்தைகளின் பெயர்கள் - கார்லோஸ் ஜூனியர், 14, கிறிஸ்டோபர், 13, கார்லா, 11, கெய்ட்லின், 11, கிறிஸ்டின், 10, செலஸ்டி, 10, கிறிஸ்டினா, 9, கால்வின், 7, கேத்தரின், 7, காலேப், 5, கரோலின், 5, கமிலா, 4, கரோல், 4 சார்லோட், 3, கிரிஸ்டல், 2, மற்றும் கிளேட்டன், 1.
இதுத் தொடர்பாக பாட்டி ஹெர்னாண்டஸ் தெரிவித்துள்ள கருத்தில் ”நான் 14 ஆண்டுகளாக கர்ப்பமாக உள்ளேன், அதனால் எனது 17வது குழந்தையைப் பெற்றெடுக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும், மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பாட்டி மொத்தமாக 20 குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புகிறார், அவள் இன்னும் 3 ஆண் குழந்தைகளைப் பெற விரும்புகிறாள், அவ்வாறு பிறந்தால் 10 ஆண் குழந்தைகளையும் 10 பெண் குழந்தைகளையும் கொண்ட குடும்பமாக மாறும்.
கார்லோஸ் மற்றும் பாட்டி ஹெர்னாண்டஸ் ஜோடி கருத்தடையை பயன்படுத்த மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.