அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்: வாக்கை செலுத்திய கமலா ஹாரிஸ்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது.
Electoral College
அமெரிக்காவில் மக்கள் நேரடியாக தங்கள் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில்லை. மாகாணங்களில் மக்கள் அளிக்கும் வாக்குகள் கணக்கிடப்பட்டு, தேர்வுக்குழு உறுப்பினர்கள் வாயிலாகதான் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.
இந்த முறையை Electoral College என்று கூறுவார்கள். Electoral College வாக்குகள், ஒவ்வொரு மக்கள்தொகை அடிப்படையில் மாகாணத்திற்கு மாகாணம் வேறுபாடும்.
உதாரணமாக, அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான கலிபோர்னியாவில் 54 Electoral College வாக்குகளும், குறைந்த மக்கள் தொகை உள்ள மாகாணமான வியாமிங்கில் 3 வாக்குகளும் உள்ளன.
538 தேர்வுக்குழு உறுப்பினர்களில் 270 பேரின் ஆதரவை பெறுபவரே, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
இந்த தேர்தலில் 16,50,00,000 பேர் வாக்களிக்க உள்ளனர். அமெரிக்க சட்டப்படி தேர்தலில் முன்கோட்டியே வாக்குகளை செலுத்த முடியும்.
அதன்படி மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இதுவரை வாக்களித்துள்ளனர்.
வாக்கை செலுத்திய கமலா ஹாரிஸ்
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. கமலா ஹாரிஸ் நேற்று மின்னஞ்சல் மூலமாக நேற்று தனது வாக்கை செலுத்தினார்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடி வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். இழுபறி இல்லையென்றால், ஜனாதிபதி யார் என்பது உடனடியாக தெரியவரும்.
அதாவது அதிகாரப்பூர்வ முடிவுகள் நாளை தெரிந்துவிடும். புதிய ஜனாதிபதி ஜனவரி 20ஆம் திகதி பதிவியேற்பார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |