அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: பொய்த்த கணிப்புகள்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் துவங்கிய நாளிலிருந்தே பெரும்பாலானோர் கமலா ஹரிஸ் ஜனாதிபதியாவார் என்றே கணித்தார்கள்.
ஆனால், மிகப்பிரபலமானவர்களின் கணிப்புகள் கூட பொய்யாய்ப் போயின.
பொய்த்த கணிப்புகள்
தி சிம்ப்சன்ஸ்
அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி, தி சிம்ப்சன்ஸ் (The Simpsons) என்னும் தொலைக்காட்சித் தொடராகும்.
அந்த தொடரில், 200ஆம் ஆண்டு வெளியான ஒரு எபிசோடில் லிசா என்னும் பெண் கமலா ஹரிஸ் போலவே உடையணிந்து நடித்திருப்பார்.
தேர்தல் பிரச்சாரம் துவங்கியதுமே, அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வரத் துவங்கின. பலரும், கமலா ஹரிஸ் தேர்தலில் வெற்றி பெறுவார் என்பதை அந்தக் காட்சி சுட்டிக்காட்டுவதாகவே தெரிவித்திருந்தார்கள்.
தேர்தல் நாஸ்ட்ரடாமஸ்
1947ஆம் ஆண்டு பிறந்தவரான ஆலன் லிக்மேன் (Allan Lichtman), வாஷிங்டனிலுள்ள அமெரிக்கப் பல்கலையில் பேராசிரியராகப் பணியாற்றும், புகழ்பெற்ற ஒரு அரசியல் வரலாற்றாளர் ஆவார்.
அவர், ’Keys to the White House’ என்னும் 13 விடயங்களின் அடிப்படையில், தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பதை கணிக்கக்கூடியவர் ஆவார்.
42 ஆண்டுகளாக, அவர் தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணித்துவந்துள்ளார். ஆகவே, அவரை தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் என்றே அழைப்பார்கள்.
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹரிஸ் வெற்றி பெறுவார் என செப்டம்பர் மாதம் 5ஆம் திகதியே கணித்துக் கூறியிருந்தா ஆலன்.
கருத்துக்கணிப்புகள்
அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான Iowaவில் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.
The Des Moines Register/Selzer poll என்னும் அந்த அமைப்பின் கருத்துக்கணிப்புகள், துல்லியமான முடிவுகளைத் தரக்கூடியவை என தரவரிசைப்படுத்தப்பட்டவையாகும்.
அதன் முடிவுகள், ஆச்சரியத்துக்குரிய வகையில் கமலா ஹரிஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கூறியிருந்தன.
ஆனால், அந்த கணிப்புகள் அனைத்துமே பொய்யாய்ப் போய்விட்டன. அவை கணித்தபடி கமலா ஹரிஸ் அல்ல, ட்ரம்பே தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |