பிரித்தானியாவின் ஒரு பகுதி மீது மட்டும் அதீத ஆர்வம் காட்டும் அமெரிக்க ஜனாதிபதிகள்: என்ன காரணம் தெரியுமா?
பிரித்தானியாவின் ஒரு பகுதியான வட அயர்லாந்து மீது அமெரிக்க ஜனாதிபதிகள் அதீத ஆர்வம் காட்டுவதை கவனித்திருக்கிறீர்களா?
வட அயர்லாந்து மீது அதீத ஆர்வம் காட்டும் அமெரிக்க ஜனாதிபதிகள்
1995ஆம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் க்ளிண்டன் வட அயர்லாந்துக்கு வருகை புரிந்தபோது, வட அயர்லாந்து மக்கள் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பளித்தார்கள்.
The New York Times பத்திரிகை, க்ளிண்டனுடைய ஆட்சிக் காலத்தின் மிகச்சிறந்த இரண்டு நாட்களை அயர்லாந்து மக்கள் அவருக்கு கொடுத்தார்கள் என குறிப்பிட்டிருந்தது.
60 ஆண்டுகளுக்கு முன், அதாவது, 1963ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு வருகை புரிந்த அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் F கென்னடி, தனது வாழ்நாளிலேயே மிகச்சிறந்த நான்கு நாட்களை, தான் அயர்லாந்தில் அனுபவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பின் அமெரிக்க ஜனாதிபதிகளான நிக்ஸன், ரீகன், ஜார்ஜ் W புஷ், ஒபாமா, ஏன் ட்ரம்ப் வரை வட அயர்லாந்துக்கு வருகை புரிந்தபோது, வட அயர்லாந்துக்கு மட்டும் ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம் என பல ஐரோப்பிய நாடுகள் பொறாமைப்பட்டன.
அதற்கு என்ன காரணம்?
அதாவது, இன்று அமைதியான நாடாக காட்சியளிக்கும் வட அயர்லாந்து, ஒரு காலத்தில் வன்முறை வெடிக்கும் நாடாக காணப்பட்டது.
1921ஆம் ஆண்டு, வட அயர்லாந்தாகவும், அயர்லாந்துக் குடியரசாகவும் அயர்லாந்து நாடு இரண்டாக பிரிக்கப்பட்டது. அதை unionists என்னும் ஒரு பிரிவினர் எதிர்த்தனர். அவர்கள் வட அயர்லாந்து பிரித்தானியாவுடனேயே இருக்கவேண்டும் என விரும்பினர்.
அதே நேரத்தில், nationalists என்னும் பிரிவினரோ, வட அயர்லாந்து அயர்லாந்துக் குடியரசின் ஒரு பாகமாக இருக்கவேண்டும் என விரும்பினர். இரண்டு தரப்பினரும் வெடிகுண்டுகள் வீசியும் துப்பாக்கிச்சூடுகள் நடத்தியும் வன்முறையில் இறங்க, 30 ஆண்டுகள் அயர்லாந்தில் வன்முறை நீடித்தது. 3,500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1998ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி, அது ஒரு புனித வெள்ளி பண்டிகை, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அது புனித வெள்ளி ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது.
விடயம் என்னவென்றால், 30 ஆண்டு வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து, வட அயர்லாந்தில் அமைதியை உருவாக்கிய இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முக்கிய பங்கு வகித்தது அமெரிக்கா!
ஆம், George Mitchell என்னும் அமெரிக்க செனேட்டர், அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் க்ளிண்டனால் வட அயர்லாந்தில் அமைதியைக் கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்டார்.
ஆக, அமெரிக்க தலையீட்டைத் தொடர்ந்தே வட அயர்லாந்தில் அமைதி உருவானது. எனவேதான், அமெரிக்க ஜனாதிபதிகள் வட அயர்லாந்து மீது அதீத கவனம் செலுத்துகிறார்கள்.
பிரித்தானியாவின் ஒரு பகுதியில் அமைதியைக் கொண்டுவர அமெரிக்கா உதவியதில் அவர்களுக்கு அவ்வளவு பெருமை எனலாம்!