ஈரானின் ஏவுகணை இலக்கில் லண்டன்... போரில் இறங்க பிரித்தானியாவை அழுத்தும் அமெரிக்கா
ஈரான் போரில் இணைமாறு பிரித்தானியா மீது ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ஈரானின் ஏவுகணை வரம்பில் லண்டனும் இருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார்.
சொன்னதெல்லாம் பொய்
கடந்த வெள்ளிக்கிழமையன்று டியாகோ கார்சியாவை நோக்கி இரண்டு இடைத்தூரப் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை அமைச்சரவைக் கூட்டத்தில் ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தலை பீட் ஹெக்செத் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையில் அந்த ஏவுகணைகள் இலக்கை எட்டும் முன்னரே முறியடிக்கப்பட்டதுடன், அந்த ஏவுகணை தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து பொறுப்பேற்றதாகவும் தகவல் இல்லை.
இந்த நிலையில், ஏவுகணை வரம்பு தொடர்பில் ஈரான் இதுவரை சொன்னதெல்லாம் பொய் என பீட் ஹெக்செத் கொந்தளித்துள்ளார். மேலும், ஈரானில் இருந்து லண்டன் 4,000 கி.மீ எனவும் வெனிசுலாவில் இருந்து வாஷிங்டன் 3,300 கி.மீ எனவும் குறிப்பிட்டுள்ள அவர்,
நல்வாய்ப்பாக ஈரானுடன் பல காலமாக கூட்டணியில் இருந்த ஒரு நாட்டை ஜனாதிபதி ட்ரம்ப் தமது கட்டுக்குள் கொண்டுவந்தார் என்றார். இதனாலையே ஈரான் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலா இல்லையா என்பதை ஜனாதிபதி ட்ரம்ப் நன்கறிந்து வைத்திருக்கிறார் எனவும் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

வெறும் பொம்மைகள்
இதனிடையே, ஜேர்மன் கடற்படையிடம் இருந்து போர் கப்பல் ஒன்றைக் கடனாக வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரித்தானியாவை மிக மோசமாக விமர்சித்த ட்ரம்ப், பிரித்தானியா போர்க்கப்பல் அனைத்தும் தங்களுடன் ஒப்பிடுகையில் வெறும் விளையாட்டு பொம்மைகள் என்றார்.
சைப்ரஸில் உள்ள RAF அக்ரோதிரி தளத்தின் மீது ஈரானிய ட்ரோன் தாக்குதல் நடந்தபோது, அதனைப் பாதுகாப்பதற்கு ஒரு பிரித்தானிய கப்பல் கூட உரிய நிலையில் இல்லாததை அடுத்து, பிரான்ஸ், கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் பிரித்தானியாவின் உதவிக்கு வந்தன.

இதன் சில வாரங்களிலேயே இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஈரானை மொத்தமாக அழித்துவிட்டதாக அறிவிக்கும் பீட் ஹெக்செத், கூடவே போருக்கு பிரித்தானியாவும் களமிறங்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
ஆனால் ஈரானின் வலிமை கண்டு வியப்பதாக ஜனாதிபதி ட்ரம்பே வெளிப்படையாக கூறியுள்ளார். இருப்பினும், போருக்கு முன்னர் வரையில் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறாக இல்லாத ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதே தங்களின் நோக்கம் என்றும் ட்ரம்ப் கூறி வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |