மாணவிகளை சட்டையை கழற்ற சொன்னார்., வகுப்பில் அத்துமீறிய பேராசிரியர் மீது நடவடிக்கை
அமெரிக்காவில் வகுப்பில் மாணவிகளை சட்டையைக் கழற்றச் சொன்ன ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் முறைகேடு
அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள மான்ட்கோமெரி கல்லூரியின் டகோமா-சில்வர் ஸ்பிரிங் வளாகத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் பாலியல் முறைகேடு சம்பவம் குறித்த விசாரணையை அமெரிக்க கல்வித்துறை முடித்துள்ளது.
மாணவிகளின் சட்டையை கழற்றச் சொன்ன பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
blendtw
கல்வித் திணைக்களத்தின் சிவில் உரிமைகள் அலுவலக அதிகாரிகளின் மூன்று மாத விசாரணையின் பின்னர் ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பேராசிரியர் மீதான குற்றச்சாட்டுகள்
வகுப்பு எடுக்கும்போது, கற்பித்தலின் ஒரு பகுதியாக 11 மாணவிகளை தங்கள் சட்டைகளைக் கழற்றுமாறு பேராசிரியர் கூறினார். இது மருத்துவ மதிப்பீட்டிற்காக என்று ஆசிரியர் கூறினார்.
Montgomery College-Maryland
மாணவிகளிடம் அவர்களின் மார்பகங்கள் மற்றும் மார்பக அளவு குறித்து மோசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
மேற்படி சம்பவத்திற்கு முன், வளாகத்தில் உள்ள சில பெண்களிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. லேப் ஜாக்கெட் அணிந்திருந்த பெண்களை ஜாக்கெட்டை கழற்றச் சொன்னார்.
பேராசிரியர் மீது 2019 அக்டோபரில் முதல் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அப்போது, வளாக அதிகாரிகள் உடனே அவரை கட்டாய விடுப்பு எடுக்கச் சொன்னார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |