அமெரிக்காவை உலுக்கிய எப்ஸ்டீன் முதல் தொகுதி ஆவணங்கள் வெளியானது - யாரெல்லாம் உள்ளது?
எப்ஸ்டீன் கோப்பின் முதல் தொகுதி ஆவணங்கள் வெளியாகியுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகள்
அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது, இளம் சிறுமிகளை தனது தீவுக்கு கடத்தி முக்கிய புள்ளிகளுடன் கட்டாயப்படுத்தி, பாலியல் தேவைக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எப்ஸ்டீன் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையில் மரணமடைந்தார்.
அவரே தனது உயிரை மாய்துக்கொண்டதாக கருதப்பட்டாலும், ஆனால், இவரது மரணத்தில் பலரும் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.
எப்ஸ்டீன் மறைவிற்கு பின்னர், அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சீலிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் எப்ஸ்டீன் கோப்புகள்(epstein files) என அழைக்கப்படுகிறது.

அவ்வப்போது எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள ஆவணங்கள் பொதுவெளிக்கு வருவது உண்டு.
இந்த எப்ஸ்டீன் கோப்புகளில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எலான் மஸ்க், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், நேற்று முதல் தொகுதி ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. இதில் டிரம்ப் பற்றிய குறிப்புகள் அரிதாகவே உள்ளது.
பில் கிளிண்டன், பில்கேட்ஸ்
முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் இளமையான தோற்றத்தில் குளியல் தொட்டியில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
🚨BREAKING US JUSTICE DEPARTMENT RELEASED A HEAVY REDACTED CACHE OF EPSTEIN FILES PHOTOS 12/18/2025
— SANTINO (@MichaelSCollura) December 20, 2025
Here are some of the photos that I skimmed through In order: 👇
Three or four boys & Jeffrey Epstein
Bill Clinton
Bill Clinton, Ghislaine Maxwell & unknown
Bill Clinton &… https://t.co/F9sEba6bnr pic.twitter.com/67EtWakYyv
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைப்பதற்காக இதில் பல்வேறு தணிக்கை செய்யப்பட்டே ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு இளம் பெண்ணுடன் இருப்பது போன்ற புகைப்படமும் உள்ளது. மைக்கேல் ஜாக்சனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. Contact புத்தகத்தில் ஜனாதிபதி டிரம்ப்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

மேலும், எப்ஸ்டீன் எவ்வாறு சிறுமிகளை தேர்வு செய்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. தனக்கு ஸ்பானிஷ் மற்றும் கருப்பு நிற சிறுமிகள் வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பில் கிளிண்டன், பில்கேட்ஸ் ஆகியோர் எப்ஸ்டீன் உடன் பழகியது பெரும் தவறு என குறிப்பிட்டுள்ளனர்.
புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் இருப்பதாலேயே அவரகள் குற்றவாளிகள் ஆகிவிட மாட்டார்கள் என கூறப்படுகிறது.
இன்னும் லட்சக்கணக்கான ஆவணங்கள் விரைவில் வெளியாகும் என துணை அட்டர்னி ஜெனரல் டோட் பிளாஞ்ச் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |