அமெரிக்க-பிரான்ஸ் உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்பில் உண்மையை வெளிப்படையாக கூறிய முக்கிய புள்ளி
அமெரிக்க-பிரான்ஸ் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்வது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் முக்கிய தகவல் ஒன்றை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, அமெரிக்க மற்றும் பிரித்தானியா ஆகிய 3 நாடுகளில் இடையே ஏற்பட்ட AUKUS ஒப்பந்தத்தை தொடர்ந்து, பிரான்ஸ் உடனானா பல பில்லியன் மதிப்பியுள்ள நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா முடிவுக்கு கொண்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, நட்பு நாடுகளான அமெரிக்கா-பிரான்ஸ் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
அமெரிக்காவுக்கான தூதரை நாடு திரும்பும் படி பிரான்ஸ் உத்தரவிட்டது.
இந்நிலையில், இப்பிரச்சனை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி மாக்ரோன் சுமார் 30 நிமிடங்கள் தொலைபேசியில் உறையாடினர்.
இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், அக்டோபர் இறுதியில் ஐரோப்பாவில் சந்திக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இதன் பின் தூதர்களை அமெரிக்காவுக்கு அனுப்ப பிரான்ஸ் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியானது.
[File: Jim Watson/
இந்நிலையில், அமெரிக்கா-பிரான்ஸ் இடையேயான பிரச்சனையை சரி செய்வதற்கு 'நேரமும் கடின உழைப்பும்' தேவைப்படும் என்று ஆண்டனி பிளிங்கன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.