உயிரை பணயம் வைத்து செய்தி வாசித்த அமெரிக்க நிருபர்! கடுமையாக தாக்கிய சூறாவளி வீடியோ
அமெரிக்காவில் சமீபத்திய ஆண்டுகளில் மிக கடுமையாக தாக்கிய தீவிர சூறாவளி ஐயான் என்று கூறப்படுகிறது
ஐயான் சூறாவளியால் கியூபா நாட்டில் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவில் சூறாவளி காற்றிலும் செய்தி சேகரித்த நிருபரை புயல் தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
ஐயான் சூறாவளி அமெரிக்க மாகாணம் புளோரிடாவின் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதி அருகே கரையை கடந்தது.
இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் போர்ட் மையர்ஸ் பகுதியில் கார்கள் நீரில் மூழ்கின. சில இடங்களில் மரங்கள் பலத்த காற்றில் பெயர்ந்து விழுந்தன.
Jim Cantore got hit by a flying tree branch during hurricane report pic.twitter.com/ybONC3VR51
— Gifdsports (@gifdsports) September 28, 2022
இந்த நிலையில் ஐயான் சூறாவளி குறித்து செய்தி வாசித்துக் கொண்டிருந்த நிருபர் ஒருவர், சூறாவளி காற்றில் சிக்கி தூக்கி வீசப்பட்டார். அவர் மீது மரத்தின் கிளை ஒன்று அவரை தாக்க கீழே விழுகிறார். உடனே சுதாரித்துக் கொண்ட செய்தியாளர் தெரு பலகை கம்பியை பிடித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு வந்து விடுகிறார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. குறித்த வீடியோவில் என்னால் எழுந்து நிற்க முடியவில்லை, நான் திகைத்து போகிறேன் என நிருபர் கூறுகிறார்.