இந்திய வணிக நிர்வாகிகளின் விசாக்களை ரத்து செய்த அமெரிக்கா
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் சில இந்திய வணிக நிர்வாகிகள் மற்றும் பெருநிறுவனத் தலைவர்களுக்கான விசாக்களை ரத்து செய்ததுடன் பின்னர் அனுமதி மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் இந்தியர்கள்
ஃபெண்டானில் உருவாக்குவதற்கான மூலப்பொருளை கடத்துவதில் அவர்கள் ஈடுபட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை என்றே, தூதரகம் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தூதரகத்தின் அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அவர்கள் இந்தியர்கள் என்று ஒரு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் இந்திய அரசு அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருவதாக அமெரிக்க தூதரகம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
இந்திய வணிக நிர்வாகிகளின் விசா ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சகம் இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை. இருதரப்பு உறவுகளைப் பாதிக்கும் வகையில் இந்திய இறக்குமதிகள் மீது 50 சதவீத வரிகளை விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
உற்பத்தி செய்யும் நாடுகளில்
முன்னதாக சீனா, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்த டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் ஃபெண்டானைல் செல்வதற்கு வழிவகுத்ததாகக் கூறியது.
இந்த வாரம் அமெரிக்க காங்கிரசுக்கு அளித்த அறிக்கையில், 23 பெரிய போதைப்பொருள் போக்குவரத்து அல்லது சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை பட்டியலிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |