இந்தியாவிற்கு Javelin ஏவுகணைகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்த அமெரிக்கா
ஜாவெலின் ஏவுகணை அமைப்பு, எக்ஸ்காலிபர் ஏவுகணைகள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களின் சாத்தியமான விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வலுப்படுத்த உதவும்
இதன் மொத்த மதிப்பு 92.8 மில்லியன் டொலர் தொகையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தேவையான ஆவணங்களை அமெரிக்காவின் DSCA அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏவுகணை விற்பனையானது அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களை ஆதரிக்கும் என்றும், அமெரிக்க-இந்திய கூட்டாண்மை உறவை வலுப்படுத்த உதவும் என்றும் DSCA தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 45.7 மில்லியன் டொலர் மதிப்பிலான Javelin FGM-148 ஏவுகணை, 25 எண்ணிக்கையில் ஜாவெலின் LwCLU அமைப்பு அல்லது ஜாவெலின் CLU அமைப்பு உள்ளிட்டவை இந்தியாவிற்கு வழங்கப்படும்.
பயிற்சியும் அளிக்கப்படுகிறது
அத்துடன், இந்த அமைப்புகளுக்கான பயிற்சியும் இந்திய வீரர்களுக்கு அமெரிக்கா தரப்பில் அளிக்கப்படுகிறது. இரண்டாவது கட்டமாக எக்ஸ்காலிபர் ஏவுகணைகள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களின் விற்பனை 47.1 மில்லியன் டொலர் மதிப்பில் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தியா தரப்பில் இருந்து 216 M982A1 எக்ஸ்காலிபர் ஏவுகணைகளை வாங்கக் கோரியுள்ளதாக DSCA இன்னொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |