வெனிசுலா ஜனாதிபதியின் ஜெட் விமானத்தை தீவு தேசத்தில் தூக்கிய அமெரிக்கா
டொமினிகன் குடியரசில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் ஜெட் விமானத்தை அமெரிக்கா கைப்பற்றியது.
அமெரிக்கா அழுத்தம்
வெனிசுலாவின் ஜனாதிபதியாக உள்ள நிக்கோலஸ் மதுரோவின் (Nicolas Maduro) வெற்றியின் நம்பகத்தன்மை குறித்த கவலைகள் தொடர்பில், தேர்தல் தரவுகளை உடனடியாக வெளியிட அந்நாட்டின் மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது.
எனினும், கடந்த மாதம் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, டொமினிகன் குடியரசிற்கு மற்றும் அங்கிருந்து வரும் வணிக விமானங்களை வெனிசுலா நிறுத்தியது.
இந்நிலையில், ஜனாதிபதி நிக்கோலஸின் ஜெட் விமானத்தை டொமினிகன் குடியரசில் கைப்பற்றிய அமெரிக்கா, அதனை புளோரிடா மாகாணத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
13 மில்லியன் டொலர்கள்
ஆனால், அது எடுக்கப்பட்டதற்கான சரியான காரணம் குறித்து வெளியிடப்படவில்லை. அமெரிக்க அதிகாரிகள் சமீபத்திய மாதங்களில் டொமினிகன் குடியரசில் (கரீபியன் தீவு தேசம்) விமானத்தின் இருப்பை தீர்மானித்தனர்.
மதுரோவின் இந்த விமானம் தோராயமாக 13 மில்லியன் டொலர்கள் மதிப்புடையது என்று கூறப்படுகிறது. மேலும் அது அவரின் அரசு பயணங்களின்போது படமாக்கப்பட்டுள்ளது.
இப்போது, விமானம் அமெரிக்காவில் தரையிறங்கிய நிலையில், வெனிசுலா அரசு அதனை ஜப்தி செய்யவும், மனுவைத் தொடரவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |