நண்பர் வீட்டின் குளியறையில் சுயநினைவின்றி கிடந்த பிரபல அமெரிக்க பாடகர்! உலக ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய மரணம்
பாடல்கள் தவிர பல திரைப்படங்களிலும் கூலியோ நடித்துள்ளார்
தீயணைப்பு வீரராகவும், விமான நிலைய பாதுகாப்பிலும் கூலியோ பணிபுரிந்திருக்கிறார்
அமெரிக்க ராப் பாடகர் கூலியோ தனது 59வது வயதில் மரணமடைந்தார். கேங்க்ஸ்டாஸ் பாரடைஸ், ஃபென்டாஸ்டிக் வோயேஜ் போன்ற பாடல்கள் மூலம் பிரபலமானவர் கூலியோ.
ஆர்டிஸ் லியோன் ஐவி ஜூனியர் என்ற இயற்பெயர் கொண்டவர் கூலியோ. ராப் பாடகராக வலம் வந்த கூலியோ, 1996ஆம் ஆண்டு கிராமி விருதை வென்றார்.
Supplied
தனது பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கூலியோ பெற்றிருக்கிறார். கடந்த 1994ஆம் ஆண்டு கூலியோ அளித்த பேட்டி ஒன்றில், தான் போதைப்பொருளுக்கு அடிமையானதாகவும், அதில் இருந்து மீண்டு வர தீயணைப்பு வீரராக வேலை செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் கூலியோ தனது நண்பர் வீட்டின் குளியறையில் சுயநினைவின்றி கிடந்ததாகவும், பின்னர் அவர் மரணமடைந்ததாகவும் அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.
Tracey Nearmy/Getty Images
ஆனால் கூலியோவின் மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ராப்பர் கூலியோவின் மரணம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tracey Nearmy/Getty Images