கடலில் விழுந்து விபத்துக்குள்ளான குட்டி விமானம்; அதிர்ஷ்டவசமாக விமானி உயிருடன் மீட்பு
அமெரிக்காவில் சிறிய விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ வைரலாகிவருகிறது.
கலிபோர்னியாவில் உள்ள ஹண்டிங்டன் கடற்கரையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கடற்கரைக்குச் செல்வோர் எதிரே சிறிய விமானம் ஒன்று தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிகவும் தாழ்வாக இயங்கிக்கொண்டிருந்த அந்த விமானம், கரையிலிருந்து சில மீட்டர் உள்ளே கடலில் வந்து விழுந்தது. குறைந்த வேகத்திலே விழுந்ததால், விமானி காயங்களுடன் உயிர் தப்பினார். விமானம் சேதமடைந்தது.
Photo: Brittany Murray, Press-Telegram/SCNG
விமானம் விழுந்த சில நொடிகளில் கடற்கரையில் இருந்தவர்கள் வேகமாக சென்று விமானியை மீட்டனர். விமானிக்கு அதிர்ஷ்டவசமாக, அங்கு ஒரு இளம் உயிர்காக்கும் போட்டி நடந்து கொண்டிருந்தது. 700க்கும் மேற்பட்ட ஜூனியர் லைஃப் கார்டுகள் தண்ணீரில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது விமானி கடலில் விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த அவர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்தச் சம்பவம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சிபிஎஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
Huntington Beach plane crash at Junior Lifeguards pic.twitter.com/a3UInlkOrJ
— Hutch (@rhutch99) July 22, 2022
ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் கூற்றுப்படி, விமானம் விபத்துக்குள்ளானபோது விமானி மட்டுமே விமானத்தில் இருந்தார். அந்த விமானம் ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய அரக்க Piper Cub விமானம் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ:
Photo: Brittany Murray, Press-Telegram/SCNG
Photo: Brittany Murray, Press-Telegram/SCNG
Photo: Brittany Murray, Press-Telegram/SCNG