மாதந்தோறும் 41 லட்சம்...இந்திய இளைஞர்களுக்கு வாரி வழங்க தயாரான சமூக ஊடகம்
திறமைகளை வெளிப்படுத்தும் 20 பேருக்கு தலா 2,500 அமெரிக்க டாலர்.
ஸ்னாப்சாட் நிறுவனம் சுமார் 41 லட்சம் தொகையை ஒதுக்கியுள்ளது.
பிரபலமான சமூக ஊடகமான ஸ்னாப்சாட் நிறுவனம் இந்திய இளைஞர்களை ஈர்ப்பதற்காக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் பொழுது போக்கிற்கு என்பதற்கு அப்பால், தற்போது பயனர்கள் தங்கள் படைப்புத் திறமையை வெளிப்படுத்தி பல வழிகளிலும் அதற்கான வெகுமதிகளை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் வாயிலாக பயனர்கள் மாதாந்திரம் லட்சங்களில் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர்.
ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில், உலகளவில் அதிக இளம் வயதினரை இந்தியா உள்ளடக்கி உள்ளது.
இப்படிப்பட்ட இந்தியாவில் பிரபலமடைவதற்காக அமெரிக்க சமூக ஊடக செயலியான ஸ்னாப்சாட் மாதம் ரூ41 லட்சம் வரை செலவிடும் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க சமூக ஊடக செயலியான ஸ்னாப்சாட், அதிக இளம் வயதினரை கவர்ந்து இழுக்கவும், மிகப்பெரிய சந்தையை ஸ்னாப்சாட் செயலியின் பக்கம் ஈர்க்கவும் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
ஸ்னாப்சாட்டின் “சவுண்ட்ஸ்” பிரிவின் கீழ் இசை பிரிவுகளை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் உரிமை பெற்ற பாடல்கள் மட்டுமின்றி, தங்களது சொந்த சுயாதீன படைப்புகளையும் வெளிப்படுத்தலாம்.
இவ்வாறு தங்களது சொந்த திறமைகளை வெளிப்படுத்தும் 20 பேருக்கு தலா 2,500 அமெரிக்க டாலர் மாதந்தோறும் வழங்க திட்டமிட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: கல்லூரியில் டிராப் அவுட்...அவுஸ்திரேலியாவில் வென்று காட்டிய இந்திய இளம் தொழிலதிபர்!
இதற்காக ஸ்னாப்சாட் நிறுவனம் சுமார் 41 லட்சம் தொகையை ஒதுக்கியுள்ளது. மேலும் இந்த திட்டம் நவம்பர் மாத மத்தியில் இருந்து நடைமுறைக்கு வருவதாகவும் ஸ்னாப்சாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.