99 F-404 ரக என்ஜின்களை வழங்க தொடங்கிய அமெரிக்கா.., வேகமெடுக்கும் Tejas MK-1A போர் விமான தயாரிப்பு
தேஜஸ் இலகுரக போர் ஜெட் திட்டத்திற்காக 99 F-404 ரக விமான எஞ்சின்களில் முதல் எஞ்சின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான GE ஏரோஸ்பேஸ் தெரிவித்துள்ளது.
என்ஜின்களை வழங்கிய அமெரிக்கா
கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தேஜஸ் இலகுரக போர் ஜெட் திட்டத்திற்காக 99 F-404 ரக விமான எஞ்சின்களை அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான GE ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.5,375 கோடி மதிப்பில் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஓர்டர் கொடுத்திருந்தது.
ஆனால், அமெரிக்க நிறுவனம் என்ஜின்களை விநியோகம் செய்ய 2 ஆண்டுகள் தாமதப்படுத்தியதால் Tejas MK-1A போர் விமான தயாரிக்க மந்த நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து, இந்திய விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி.சிங் அதிருப்தி தெரிவித்தார். மேலும் அவர், ஒவ்வொரு ஆண்டும் 40 போர் விமானங்களை படையில் சேர்த்தால்தான் போருக்கு தயாராக முடியும் என்று கூறினார்.
இந்நிலையில், முதல் எஞ்சினை நிறுவனம் விநியோகம் செய்ததால் ஆண்டுக்கு 20 போர் விமானங்களை தயாரிக்க முடியும் என்று எச்ஏஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை எச்ஏஎல் நிறுவனமானது 40 தேஜஸ் மார்க்-1 ரக போர் விமானங்களை தயாரிக்க வேண்டும் என்று இந்திய விமானப்படை ஓர்டர் கொடுத்திருந்தது. இதில் இதுவரை 38 விமானங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 2021 இல், பாதுகாப்பு அமைச்சகம் IAF க்காக 83 தேஜாஸ் MK-1A ஜெட் விமானங்களை வாங்குவதற்காக HAL உடன் ரூ.48,000 கோடி ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விநியோகங்கள் தொடங்கவிருந்தன. இருப்பினும், இன்னும் ஒரு விமானம் கூட வழங்கப்படவில்லை.
இதனிடையே, கடந்த ஆண்டு நவம்பரில் பாதுகாப்பு அமைச்சகம் இந்திய விமானப்படைக்கு கூடுதலாக 97 தேஜாஸ் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான ஆரம்ப ஒப்புதலை வழங்கியது.
இந்திய விமானப்படையில் தற்போது 30 போர்விமானப் படைப்பிரிவுகள் உள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ள இன்னும் 42 போர் விமான படைப்பிரிவுகள் வேண்டும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |