அமெரிக்க நகரங்களை சூறையாடிய சூறாவளி! 10 பேர் உயிரிழப்பு..மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளை சூறாவளி தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூறாவளி தாக்குதல்
சனிக்கிழமை கென்டக்கி மாகாணத்தை சூறாவளி கடுமையாக தாக்கியது. அதேபோல் ஜார்ஜியா உள்ளிட்ட இன்னும் சில மாகாணங்களிலும் சூறாவளி தாக்குதலால் வெள்ளம் ஏற்பட்டது.
இதில் கென்டக்கி 8 பேர் என மொத்தம் 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புவதாக ஆளுநர் ஆன்டி பெஷியர் கூறியுள்ளார்.
விலகி இருங்கள்
மேலும் அவர் கூறுகையில், "மக்களே, இப்போதே சாலைகளில் இருந்து விலகி இருங்கள், உயிர் பிழையுங்கள். இது தேடல் மற்றும் மீட்பு கட்டம், மேலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, அங்குள்ள அனைத்து கென்டக்கியர்களையும் பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என தெரிவித்தார்.
புயல்கள் தொடங்கியதில் இருந்து மாகாணம் முழுவதும் 1,000 மீட்புப் பணிகள் நடந்துள்ளதாக கூறிய அவர், சுமார் 39,000 வீடுகளுக்கு மின்சாரத்தை புயல்கள் துண்டித்துவிட்டதாக கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |