உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து
பெரும் குளிர்காலப் புயலான ஃபெர்ன் காரணமாக அமெரிக்காவில் டெக்சாஸ் வரை மேற்கே உள்ள பகுதிகளில் 600,000-க்கும் மேற்பட்ட மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவசரகால பேரிடர்
ஞாயிற்றுக்கிழமை 9,600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுக்கிறது. கடுமையானப் பனிப்பொழிவால் கிழக்கு மாகாணங்கள் மொத்தம் முடங்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் வாரத்தின் பிற்பகுதிகளில், நாட்டின் கிழக்குப் பகுதியின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் பனி, உறைபனி மழை, உறைபனித் தூறல் மற்றும் அபாயகரமான கடுங்குளிர் நிலவும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தென் கரோலினா, வர்ஜீனியா, டென்னசி, ஜார்ஜியா, வட கரோலினா, மேரிலாந்து, ஆர்கன்சாஸ், கென்டக்கி, லூசியானா, மிசிசிப்பி, இந்தியானா மற்றும் மேற்கு வர்ஜீனியாவில் ஃபெடரல் அவசரகால பேரிடர் அறிவிப்புகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஒப்புதல் அளித்துள்ளார்.
நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்த புயலின் பாதையில் உள்ள அனைத்து மாகாண நிர்வாகங்களுடனும் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், பாதுகாப்பாக இருங்கள், கதகதப்பாக இருங்கள் என்றும் அமெரிக்க மக்களுக்கு ட்ரம்ப் தமது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பதினேழு மாகாணங்களும் கொலம்பியா மாவட்டமும் வானிலை அவசரநிலையை அறிவித்துள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

விமானங்கள் ரத்து
கடும் பனிப்பொழிவு நீடிக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை, 500,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகினர். மிசிசிப்பி, டெக்சாஸ் மற்றும் டென்னசி ஆகிய மாகாணங்களில் ஒவ்வொன்றிலும் 100,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
லூசியானா மற்றும் நியூ மெக்சிகோ ஆகியவையும் பாதிக்கப்பட்ட மற்ற மாகாணங்களில் அடங்கும். தென்கிழக்குப் பகுதியில் பரவலான மற்றும் கனமான பனிப் பொழிவுகளை ஏற்படுத்தும், வழக்கத்திற்கு மாறாக தீவிர மற்றும் நீண்ட கால குளிர்காலப் புயல் குறித்து தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.
இதனிடையே, திங்கட்கிழமைக்குள் கிரேட் பிளெய்ன்ஸ் பகுதிக்குள் மேலும் பரவக்கூடிய சாதனை அளவிலான குறைந்த வெப்பநிலை மற்றும் அபாயகரமான குளிர் காற்று குறித்து வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த 9,600-க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் சனிக்கிழமையன்று 4,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
முக்கிய அமெரிக்க விமான நிறுவனங்கள் அனைத்தும், திடீர் விமான மாற்றங்கள் மற்றும் ரத்துசெய்தல்கள் குறித்து பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |