மர்ம பொருள் மீது மோதிய அமெரிக்க அணுசக்தி நீர்முழ்கி கப்பல்! பலர் படுகாயம்
தென் சீனக் கடலில் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அடையாளம் தெரியாத பொருளுடன் மோதியதில் பல மாலுமிகள் காயமடைந்தனர்.
யுஎஸ்எஸ் கனெக்டிகட் (USS Connecticut) எனும் அந்த நீர்மூழ்கிக் கப்பல் இந்த சம்பவத்திற்குப் பிறகு "பாதுகாப்பான மற்றும் நிலையான நிலையில்" உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த நீர்மூழ்கிக் கப்பல் அக்டோபர் 2-ஆம் திகதி "ஒரு பொருளை" தாக்கியது, ஆனால் அந்த மோதல் அணு உந்துதல் அமைப்பு சேதமடையவில்லை என்பதால் கப்பல் தொடர்ந்து இயங்கிவருகிறது.
Photo: US Navy
இந்தவிபத்தில் 11 மாலுமிகள் காயமடைந்தனர், மற்றவர்களுக்கு சிறிய கீறல்கள் மற்றும் காயங்கள் மட்டுமே இருந்தன என்றும் அவர்களுக்கு நீர்மூழ்கிக் கப்பலில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க கடற்படை அதிகாரிகள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளனர்.
அறிக்கையில், விபத்து நடந்த இடம் உறுதி செய்யப்படவில்லை, ஆனால் அநாமதேயமாக இருக்க விரும்பும் இரண்டு அதிகாரிகள், தென் சீனக் கடலில் நீர்மூழ்கிக் கப்பல் குவாம் நோக்கிச் சென்றபோது அது நிகழ்ந்தது என்று தெரிவித்தனர்
353 அடி நீளம் கொண்ட யுஎஸ்எஸ் கனெக்டிகட்டில் எந்த பொருள் மோதியது என்பதை அதிகாரிகள் வெளியிடவில்லை, ஆனால் அது மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலாக இருக்காது என்று நம்பப்படுகிறது.