அமெரிக்கா- சுவிட்சர்லாந்து வர்த்தக பேச்சுவார்த்தை: ட்ரம்ப் விதித்த சுங்கவரி குறைய வாய்ப்பு
அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளன.
சுவிஸ் பொருட்களுக்கு டொனால்டு ட்ரம்ப் விதித்த 39 சதவீத சுங்கவரி குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் பொருளாதார அமைச்சர் Guy Parmelin, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer உடன் நடத்திய சந்திப்புக்குப் பிறகு, "மிகவும் நல்ல உரையாடல் நடந்தது, பெரும்பாலான விடயங்கள் தெரிவானது" என கூறியுள்ளார்.
சுவிஸ் தரப்பிலும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் திறம்பட எட்டப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள், சுவிஸ் தரப்பு அமெரிக்காவுடனான வர்த்தக உபரியை (Trade Surplus) குறைக்கும் திட்டத்தை முன்வைத்ததாகவும், அதற்கான நடவடிக்கைகள் நேர்மறையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
2024-ல் 38.3 பில்லியன் டொலர் மதிப்பிலான உபரி இருந்த நிலையில், 2025-ல் அது 55.7 பில்லியன் டொலராக உயர்ந்தது. இதனால், ட்ரம்ப் “பரஸ்பர” சுங்கவரி விதித்தார்.
சுவிஸ் மருந்து நிறுவனங்கள், குறிப்பாக Roche, அமெரிக்காவில் முதலீடு செய்யும் திட்டங்கள், பேச்சுவார்த்தைக்கு சாதகமாக அமைந்துள்ளன. சுவிஸ் வணிக சமூகமும், உற்பத்தி நடவடிக்கைகளை அமெரிக்காவில் மீளமைக்க முயற்சி செய்கிறது.
பார்மெலின், சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், இது சுவிஸ் தொழில்துறைக்கு “ray of hope” என ETH Zurich-இன் KOF பொருளாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
39 சதவீத சுங்கவரி தொடர்ந்தால், சுவிட்சர்லாந்தில் 7,500 – 15,000 வேலைவாய்ப்புகள் ஆபத்தில் உள்ளன. ஆனால் 15 சதவீதமாக குறைந்தால், 2026-ல் பொருளாதார வளர்ச்சி மீண்டும் 1 சதவீதத்திற்கு மேல் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், சுவிஸ் இயந்திரங்கள், துல்லிய கருவிகள், கடிகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற முக்கிய ஏற்றுமதி துறைகளுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US Switzerland trade talks 2025, Trump 39 percent tariffs Swiss goods, Switzerland US trade surplus deal, Swiss exports tariff reduction, US trade representative Jamieson Greer, Guy Parmelin tariff negotiations, Swiss pharma investment in US, ETH Zurich KOF economic forecast, Swiss watch exports tariff cut, US Switzerland economic agreement