ட்ரம்பால் 35 பில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்பை சந்தித்த உலகளாவிய நிறுவனங்கள்
மூன்றாம் காலாண்டு வருவாயை நோக்கிச் செல்லும் உலகளாவிய நிறுவனங்கள் ட்ரம்பின் வரிகளால் 35 பில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்பை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.
தொடர்ச்சியாக அதிக வரி
ஜனாதிபதி ட்ரம்பின் வர்த்தகப் போரானது, 1930களுக்குப் பிறகு அமெரிக்க வரிகளை மிக உயர்ந்த மட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. மட்டுமின்றி, தொடர்ச்சியாக அதிக வரிகளையும் ட்ரம்ப் அச்சுறுத்தி வந்துள்ளார்,
ஆனால் ஒட்டுமொத்தமாக, பல வணிகங்களை முடக்கிய இந்த அச்சுறுத்தல் தற்போது விலகி வருகிறது என்றே கூறுகின்றனர். 2025 ஆம் ஆண்டில் நிறுவனங்கள் 21.0 பில்லியன் டொலர் முதல் 22.9 பில்லியன் டொலர் வரை மொத்தமாக நிதி இழப்பை எதிர்பார்க்கின்றன.
2026ல் இதன் தாக்கம் 15 பில்லியன் டொலராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானுடன் வரி விகிதத்தைக் குறைத்து வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய பிறகு, பல நிறுவனங்கள் தங்கள் முந்தைய மோசமான நிலை கணிப்புகளைக் குறைத்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தை அடுத்து பிரெஞ்சு மதுபான தயாரிப்பாளர்கள் ரெமி கோயிண்ட்ரூ மற்றும் பெர்னோட் ரிக்கார்ட் ஆகிய இரு நிறுவனங்களும் எதிர்பார்க்கும் இழப்பை குறைத்துள்ளனர்.
ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் எஸ்&பி 500 நிறுவனங்கள் 9.3% வருவாய் வளர்ச்சி விகிதத்தைக் எட்டும் என்று கணிக்கப்பட்டது. இரண்டாவது காலாண்டில் இது 13.8 சதவீதமாக இருந்தது. ஐரோப்பாவின் Stoxx 600, முந்தைய காலாண்டில் 4% ஆக இருந்த வளர்ச்சியை விட 0.5% குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |