இனி இந்த நோய்கள் இருந்தால் அமெரிக்கா வர முடியாது - டிரம்ப் அதிரடி உத்தரவு
உடல்நலக்குறைபாடு உள்ளவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க விசா
அமெரிக்காவில் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில், டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான H1B விசாவிற்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அறிவித்தார்.
தற்போது, உடல்நலக்குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அமெரிக்க விசா வழங்க வேண்டாம் என தூதரகங்களுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்கா விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது தொற்று நோய்கள் உள்ளதா? தடுப்பூசி முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என பரிசோதிக்கப்படும்.
இந்த நோயாளிகளுக்கு விசா கிடையாது
தற்போது, உடல் பருமன், நீரிழிவு, இதய நோய், புற்றுநோய், வளர்சிதை மாற்ற நோய்கள், நரம்பியல் நோய்கள் மற்றும் மனநல நிலைமைகள் ஆகியவையும் பரிசோதிக்கப்படும்.

இந்த நோய்களுக்கு சிகிச்சை பெற லட்சக்கணக்கில் நிதி தேவைப்படும் என்பதால், தேவையான அளவுக்கு அவர்கள் நிதி ஆதாரம் வைத்துள்ளார்களா என மதிப்பிடவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதன் காரணமாக அமெரிக்கா மக்களின் வரிப்பணம் வீணடிக்க வாய்ப்புள்ளது என்பதால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
விண்ணப்பதாரர் மட்டுமல்லாது, அவரின் குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர்களின் உடல்நிலைகளையும் மதிப்பீடு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |