கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா அனுமதியை மறுக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு
ட்ரம்ப் நிர்வாகம் இனி கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா அனுமதியை நிராகரிக்கும் என இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
பயணத்தின் நோக்கம்
சமுக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குடியுரிமை பெறுவதற்கான ஒரு குறுக்குவழியாக, அமெரிக்க மண்ணில் குழந்தை பெற்றெடுக்கும் நோக்கம் சுற்றுலாப் பயணிக்கு இருப்பதாக ஏதேனும் அறிகுறி தெரிந்தால்,
அமெரிக்கா விசா விண்ணப்பங்களைச் செயல்படுத்தாது என்று தூதரகம் குறிப்பிட்டுள்ளள்ளது. ஒரு குழந்தையின் அமெரிக்கக் குடியுரிமைக்காக அமெரிக்காவில் பிரசவிப்பதே பயணத்தின் முக்கிய நோக்கம் என்று அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் நம்பினால்,
அவர்கள் சுற்றுலா விசா விண்ணப்பங்களை நிராகரிப்பார்கள். இப்படியான செயற்பாடுகள் இனி அனுமதிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அமெரிக்கா தனது சமூக ஊடக மற்றும் இணையதள இருப்பு குறித்த ஆய்வை, அனைத்து H-1B சிறப்புத் தொழில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் H-4 விசாவை சார்ந்திருப்பவர்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது.
டிசம்பர் 15 முதல்
இந்த நடவடிக்கை, இந்தியாவில் உள்ள பல விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் விசா நேர்காணல் சந்திப்புகள் மறுதிட்டமிடப்பட்டதாகத் தெரிவிக்கும் மின்னஞ்சல்கள் வந்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைகள் டிசம்பர் 15 முதல் அமுலுக்கு வருகிறது. அனைத்து எச்-1பி மற்றும் எச்-4 விண்ணப்பதாரர்களுக்கும் சமூக ஊடகப் பரிசோதனையை கட்டாயமாக்குவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் சமீபத்திய நடவடிக்கையாகும்.
இந்த முடிவு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் புதிய நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஒவ்வொரு விண்ணப்பமும் விரிவான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |