அமெரிக்க சுற்றுலா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி
US tourism from Switzerland slumps: அமெரிக்க சுற்றுலா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்க சுற்றுலா சென்ற சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது, 16.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக சுவிஸ் பயணக் கூட்டமைப்பு என்னும் அமைப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்கா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் 120,000 சுவிஸ் நாட்டவர்கள் மட்டுமே அமெரிக்க சுற்றுலா சென்றுள்ளார்கள்.
முழு 2026ஐயும் கணக்கிடும்போது, அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் சுவிஸ் மக்கள் எண்ணிக்கை 300,000 ஆக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எப்படி கனடா மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதித்ததால் கோபமடைந்த கனேடியர்கள் அமெரிக்காவை புறக்கணிக்கத் துவங்கினார்களோ, அதேதான் சுவிட்சர்லாந்திலும் நடந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், சுவிஸ் தயாரிப்புகள் மீது 39 சதவிகித வரிகள் விதித்துள்ள விடயம் சுவிஸ் மக்களை கோபமடையச் செய்துள்ளது.
ஆகவே, அமெரிக்க சுற்றுலாவைத் தவிர்ப்பது என சுவிஸ் மக்களில் 65 சதவிகிதம் பேர் முடிவு செய்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மேலும், அமெரிக்கா செல்லும் சுவிஸ் சுற்றுலாப்பயணிகள் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையங்களில் கைது செய்வதாக வெளியாகிவரும் தகவல்கள் சுவிஸ் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆக மொத்தத்தில், ட்ரம்பின் நடவடிக்கைகளால், சுவிஸ் மக்களில் பெரும் எண்ணிக்கையிலானோர், அமெரிக்க சுற்றுலாவைத் தவிர்த்துவருகிறார்கள்.