ஜேர்மனியில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா செய்துவரும் வேலை!
ஜேர்மனியில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் படைகளுக்கு அமெரிக்கா பயிற்சி அளித்துவருகிறது.
ஜேர்மனியில் உக்ரேனிய துருப்புக்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும், மேம்பட்ட ஆயுத அமைப்புகளை கற்றுக் கொள்ள உதவுவதாகவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பயிற்சித் திட்டம்
"ஜேர்மனியில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளில் முக்கிய அமைப்புகளில் உக்ரேனிய ஆயுதப் படைகளுடன் அமெரிக்கா பயிற்சியைத் தொடங்கியுள்ளது" என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஜேர்மன் அரசாங்கத்துடன் இணைந்து இந்த பயிற்சித் திட்டம் இருப்பதாக கூறிய கிர்பி, "ஜேர்மனியின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்றார். சுமார் 50 உக்ரேனியர்கள் நீண்ட தூர ஆயுதமான ஹோவிட்சர் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர்.
பயிற்சி பெறுபவர்கள் ரேடார் அமைப்புகள் மற்றும் கவச வாகனங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் கற்றுக்கொள்வார்கள்.
புளோரிடா தேசிய காவலர் படை உக்ரேனிய பயிற்சியாளர்களுடன் மீண்டும் இணைந்துள்ளனர். பிப்ரவரி பிற்பகுதியில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முன்பு புளோரிடா தேசிய காவலர் படை உக்ரேனியப் படைகளுக்கு பயிற்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பென்டகன் செய்தித் தொடர்பாளர், உக்ரேனியப் படைகளுக்கு ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது, ஆனால் இருப்பிடங்களை வெளியிடவில்லை.
முன்னதாக உக்ரைன் படைகளுக்கு ஆயுதம் கொடுப்பதற்கு எதிராக மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே போலந்து எல்லைக்கு அருகில் உள்ள நேட்டோ பயிற்சி மையத்தை ரஷ்யா தாக்கியது.