ஏழு மாதங்கள்... தொடர்ந்து அமெரிக்காவைப் புறக்கணிக்கும் கனேடியர்கள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா மீது கூடுதல் வரிவிதித்தது மற்றும் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டியது ஆகிய விடயங்களை மறப்பதில்லை என கனேடிய மக்கள் முடிவு செய்துவிட்டதுபோல் தோன்றுகிறது.
ஆம், அமெரிக்கப் பயணத்தைப் கனேடியர்கள் புறக்கணிப்பது, தொடர்ந்து ஏழு மாதங்களாக தொடர்கிறது!
அமெரிக்கப் பயணத்தைப் புறக்கணிக்கும் கனேடியர்கள்
அமெரிக்காவுக்கு கார் மூலம் சென்று திரும்பும் கனேடியர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தில் 36.9 சதவிகிதம் குறிந்துள்ளது.
அத்துடன், விமானம் மூலம் அமெரிக்காவுக்குச் சென்று திரும்பும் கனேடியர்கள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 25.8 சதவிகிதம் குறைந்துள்ளது.
மொத்தமாக பார்த்தால், கடந்த ஆண்டில் 2.6 மில்லியன் கனேடியர்கள் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில், இந்த ஆண்டு 1.7 மில்லியன் பேர் மட்டுமே அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார்கள்.
இன்னொரு விடயம், ட்ரம்பின் எரிச்சலூட்டும் நடவடிக்கைகளால் அமெரிக்காவைப் புறக்கணிக்கும் கனேடியர்கள் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து தொடர்ச்சியாக அதிகரித்துவருவதையும் தரவுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |