130 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தோன்றும் பேய் ஏரி - நீரில் மூழ்கும் வீடுகள்
130 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான ஏரி தற்போது மீண்டும் நீர் வர தொடங்கியுள்ளது.
பேய் ஏரி
அமெரிக்காவின் மிசிசிப்பி நதிக்கு மேற்கே மிகப்பெரிய நன்னீர் ஏரியாக இருந்த துலாரே ஏரி, 'பேய் ஏரி' என மக்களால் அழைக்கப்பட்டது.
இந்த ஏரி, 100 மைல் நீளம், 30 மைல் அகலத்துடன், பேக்கர்ஸ்ஃபீல்டில் இருந்து சான் பிரான்சிஸ்கோ வரை நீராவி கப்பல் மூலம் பயணம் செய்யும் அளவிற்கு ஏரி ஆழமாக இருந்தது.
இந்த பகுதியில், மழைப்பொழிவு குறைவாக இருப்பதால், அங்குள்ள டாச்சி யோகுட் என்ற பூர்விக பழங்குடி மக்கள் அந்த ஏரியையே நம்பியிருந்தனர்.
மனிதர்களின் நீர்ப்பாசன திட்டங்களால், மெல்ல மெல்ல மாயமாக தொடங்கிய அந்த ஏரி 1890 ஆம் ஆண்டு முற்றிலும் மயமானது.
இதனால் அந்த ஏரி இருந்த பகுதியில் மக்கள் விவசாயம் செய்ய தொடங்கியதோடு, வீடு கட்டியும் வசிக்க தொடங்கினர்.
மீண்டும் தோன்றும் ஏரி
இந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் இந்த ஏரி மீண்டும் தோன்ற தொடங்கியுள்ளது. தற்போது, கலிபோர்னியாவில் உள்ள பல்வேறு ஆறுகள் மீண்டும் இந்த எரிக்கே வர தொடங்கியுள்ளது.
சியரா நெவாடா மலைகளிலிருந்து அதிகளவிலான பனி உருகுவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இது, அங்குள்ள பழங்குடி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மக்கள் ஏரியின் கரையோரங்களில் மீன் பிடிக்க தொடங்கியுள்ளனர்.
அதேவேளையில், அந்த பகுதியில் விவசாயம் செய்த மற்றும் வீடு கட்டி வசித்து வந்த மக்களின் நிலை கேலிக்குறியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |