சட்டவிரோத செயல்... இந்தியர்களுக்கு விசா தடைகளை விதித்த ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவிற்கு சட்டவிரோத இடம்பெயர்வைத் தெரிந்தே எளிதாக்குவதாகக் குறிப்பிட்டு இந்திய பயண முகவர்கள் மீது விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை தெரிவித்துள்ளது.
விசா தடை
இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில், குடியேற்றம் மற்றும் தேசிய இனச் சட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள பயண நிறுவனங்களுடன் தொடர்புடைய குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் விசா தடைகளை எதிர்கொள்ள உள்ளனர்.
பொதுவாக இலக்கு வைக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடாமல் அமெரிக்க நிர்வகாம் பெரும்பாலும் விசா தடைகளை வெளியிடுகிறது. வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவிக்கையில்,
வெளிநாட்டினர் கடத்தல் தொடர்பான செயற்பாடுகளைத் துண்டிக்க, பயண நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு எதிராக விசா கட்டுப்பாடுகளை விதிக்க நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.
நாடு கடத்தும் முயற்சி
ஆனால், பயண முகவர்கள் சட்டவிரோத இடம்பெயர்வுக்கு எவ்வாறு உதவினார்கள் என்பதை விவரிக்க அவர் மறுத்துள்ளார். அமெரிக்காவிற்குள் குடியேறுவதைத் தடுக்கும் விரிவான அளவிலான நடவடிக்கைகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் நிலையில்,
நாட்டில் ஆவணமற்ற குடியேறிகளை நாடு கடத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. அமெரிக்காவிற்கு வருகை தரும் இந்தியர்கள், அனுமதிக்கப்பட்ட தங்கும் காலத்தை விட அதிகமாக நாட்டில் தங்க வேண்டாம் என்றும்,
அவ்வாறு செய்தால் நாடு கடத்தப்படுவார்கள் என்றும், நாட்டிற்குள் நுழைவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சமூக ஊடக தளங்களில் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |