சீனாவின் PL-15 ஏவுகணையை எதிர்கொள்ள நவீன ஏவுகணையை உருவாக்கிவரும் அமெரிக்கா
சீனாவின் PL15 ஏவுகணையை எதிர்கொள்ள, அமெரிக்கா அதன் புதிய AIM-260 JATM எனும் நவீன ஏவுகணையை உருவாக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையே நடந்த Operation Sindoor-ல் பாகிஸ்தான் சீனாவின் PL-15 ஏவுகணைகளை இந்தியாவின் விமானங்களுக்கு எதிராக பயன்படுத்தியது.
பத்து PL-15 ஏவுகணைகள் ஏவப்பட்டதில் 9 ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தடுத்தது. இந்த ஏவுகணையின் ரேஞ்ச் 200 முதல் 250 கி.மீ. வரை உள்ளது.
இதனால், இந்த PL-15 மற்றும் PL-17 ஏவுகணைகள் இந்திய-பசிபிக் பகுதியில் பெரும் அச்சுறுத்தளாக இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா Lockheed Martin மூலம் AIM-260 JATM (Joint Advanced Tactical Missile) திட்டத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறது.
AIM-260 JATM திட்டத்தின் செலவு 1 பில்லியன் டொலர் ஆகும்.
இது AIM-120 AMRAAM ஏவுகணையை மாற்றும் வகையில் உருவாக்கப்படுகிறது.
AIM-260 ஏவுகணையின் ரேஞ்ச் 200 கி.மீ.க்கு மேல் என கூறப்படுகிறது. இது F-22, F-35 போன்ற ஸ்டெல்த் போர் விமானங்கள் மூலம் ஏவக்கூடியது.
Beyond Visual Range (BVR) திறன் கொண்ட இந்த ஏவுகணை, சீனாவின் PL-15 ஏவுகணையை விட மேம்பட்டதாக அமைகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
AIM-260 JATM missile, PL-15 vs AIM-260, US China missile rivalry, Lockheed Martin AIM-260, Operation Sindoor missile, Pakistan PL-15 India