ரஷ்ய ஆயுத உற்பத்திக் கூடத்தில் உளவு பார்த்ததாக அமெரிக்கச் செய்தியாளர் கைது
உளவு பார்த்ததாக அமெரிக்க பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச் மீது ரஷ்யா முறைப்படி குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கச் செய்தியாளர் ரஷ்யாவில் கைது
ரஷ்யாவில் உளவு பார்த்ததாக 31 வயதான அமெரிக்கச் செய்தியாளர் எவன் கெர்ஷ்கோவிச் (Evan Gershkovich) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் Wall Street Journal நிருபரான எவன் கெர்ஷ்கோவிச் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
சட்ட அமலாக்கத் துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரஷ்ய அரசு நடத்தும் நிறுவனமான TASS இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
evangershkovich.com
20 ஆண்டு சிறைத்தண்டனை
எவன் கெர்ஷ்கோவிச் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
எவனின் மேல்முறையீட்டு மனு மீது இந்த மாத இறுதியில் மாஸ்கோ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவன் கெர்ஷ்கோவிச் ரஷ்யாவின் ஆயுத உற்பத்திக் கூடத்திலிருந்து ரகசியத் தகவல்களைச் சேகரிக்க முயன்றதாகச் சென்ற வாரம் ரஷ்யா அவரைக் கைது செய்தது.
AFP; Twitter/JTA
தம்முடைய ஊழியர் உளவு பார்த்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள Wall Street Journal பத்திரிக்கையும், வெள்ளை மாளிகையும் அவரை உடனே விடுதலை செய்யும்படி வலியுறுத்தின.