FIFA கால்பந்து தொடர்பில் கனடாவிற்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
காட்டுத்தீ புகையின் காரணமாக, FIFA உலகக்கிண்ண இறுதிப் போட்டி ஒத்திவைக்கப்படலாம் என கனடாவிற்கான அமெரிக்க தூதர் எச்சரித்துள்ளார்.
இறுதிப்போட்டி
FIFA கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி நியூயார்க் நியூ ஜெர்ஸி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன.
காட்டுத்தீயில் இருந்து தெற்கு நோக்கி பரவும் புகையின் காரணமாக இப்போட்டி ஒத்திவைக்கப்படலாம் என அமெரிக்கத் தூதர் எச்சரித்துள்ளார்.
ஒட்டாவாவுக்கான அமெரிக்கத் தூதரான பீட் ஹோக்ஸ்ட்ரா, "மாசுபாடு மிக மோசமாக இருந்து, அது வீரர்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ, ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருந்தால், போட்டியை நடத்த வேண்டாம் என்று முதலில் குரல் கொடுப்பவர் அமெரிக்க ஜனாதிபதியாகத்தான் இருப்பார்.
பாதுகாப்பற்ற சூழலில் போட்டியை நடத்தி, வீரர்கள் அல்லது உலகம் முழுவதிலும் இருந்து வரும் மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை நாங்கள் ஆபத்தில் ஆழ்த்தப்போவதில்லை" என கனேடிய ஊடகத்திற்கு நேர்காணலில் கூறினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |