பிரான்சுக்கு செல்ல தன் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிரபல நாடு
கொரோனா பரவல் அச்சம் காரணமாக பிரான்சுக்கு பயணிப்பது தொடர்பில் தன் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா.
பிரான்ஸ் கொரோனாவின் நான்காவது அலையுடன் போராடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்கா, இந்த திங்கட்கிழமை (9.8.2021) முதல் பிரான்சுக்கு செல்வது தொடர்பில் தன் குடிமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, அமெரிக்கர்களுக்கு Level 4: Do Not Travel என்னும் நான்காவது மட்ட பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நோய் தடுப்பு மையங்களும் இதே எச்சரிக்கையை ஏற்கனவே விடுத்துள்ளன.
அமெரிக்க நோய் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், உங்களுக்கு கட்டாயம் பிரான்ஸ் செல்லவேண்டிய நிலை வந்தால், பயணிக்கும் முன் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டதை உறுதி செய்துகொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பிரான்சில் 6 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன், 111,000 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.