நியாயமற்ற விதிமுறைகள்: ஐரோப்பாவிற்கு அமெரிக்கா பதிலடி எச்சரிக்கை
ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விதிக்கும் வரிகள் மற்றும் விதிமுறைகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR), சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில், “ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்புநாடுகள் தொடர்ந்து அமெரிக்க சேவை நிறுவனங்களுக்கு எதிராக வழக்குகள், வரிகள், அபராதங்கள், உத்தரவுகள் மூலம் தொடர்ந்து தொந்தரவு செய்கின்றன” என்று குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், Accenture, DHL, Mistral, Siemens, Spotify போன்ற முக்கிய ஐரோப்பிய நிறுவனங்களுக்கு எதிராக புதிய வரிகள் அல்லது தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதற்கு பதிலளித்த ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தாமஸ் ரெக்னியர், “எங்கள் விதிகள் அனைத்து நிறுவனங்களுக்கும் சமமாகவும் நியாயமாகவும் பொருந்தும். எந்த பாகுபாடும் இல்லை” என்று கூறியுள்ளார்.

Google-க்கு விதிக்கப்பட்ட 3.47 பில்லியன் டொலர் அபராதம், Elon Musk-ன் X சமூக வலைத்தளத்திற்கு விதிக்கப்பட்ட 140 மில்லியன் டொலர் அபராதம் போன்ற ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்கா, “எங்கள் நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு இலவச சேவைகள் வழங்குகின்றன, ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் அமெரிக்காவில் சுதந்திரமாக செயல்படுகின்றன. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய விதிகள் அமெரிக்க நிறுவனங்களின் போட்டித் திறனை குறைக்கின்றன” என்று வாதங்களை முன்வைத்துள்ளது.
முன்னதாக, கனடா தனது டிஜிட்டல் சேவை வரியை ரத்து செய்தது. காரணம், ட்ரம்ப் அரசு வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்தியதை அடுத்து, கனடா அமெரிக்காவுடன் உறவை சீராக வைத்துக்கொள்ள விரும்பியது.
இந்த எச்சரிக்கை, அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய இடையிலான தொழில்நுட்ப மற்றும் வர்த்தக மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US EU tech regulation dispute 2025, Trump threatens tariffs on EU tech firms, USTR statement EU digital markets act, Accenture DHL Siemens Spotify targeted, EU antitrust fines Google Musk X network, US retaliation against EU digital taxes, Thomas Regnier EU Commission response, Canada rescinds digital services tax Trump, US EU trade tensions technology sector, Washington vs Brussels tech policy clash