பிறந்தநாளே இறந்த நாளான சோகம்., அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த நபர்
அமெரிக்காவில் பிறந்தநாளிலேயே ஒருவர் பணியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் குளிர்கால புயலின் போது வெளியே மாட்டிக்கொண்ட நபர் ஒருவர் தனது பிறந்தநாளில் உறைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
56 வயதான வில்லியம் க்ளே, Buffalo-வில் குளிர்கால புயலால் பாதிக்கப்பட்ட 16 பேரில் ஒருவராக உறுதிப்படுத்தப்பட்டார்.
கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தைய நாள் மாலை (சனிக்கிழமை) அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரது உடலை குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் கண்டதாக தி மிரரில் செய்தி வெளியாகியுள்ளது.
PC: Sophia Clay, via GoFundMe
நியூயார்க்கில் உள்ள Buffalo சமீப நாட்களாக பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலை மற்றும் பெரும் பனிப்புயல்களால் வாட்டி வதைக்கிறது.
ஃபேஸ்புக் பதிவில், வில்லியம் க்ளேயின் சகோதரி அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரினார். ஆனால் மறுநாள் அவர் சடலமாகவே திரும்ப கிடைத்தார்.
இதையடுத்தது வில்லியம் க்ளேயின் சகோதரி மீண்டும் தனது ஃபேஸ்புக் பதிவில் "12/24/2022 அன்று 2022 பனிப்புயலின் போது தனது உயிரை இழந்த அந்த மனிதனின் சகோதரி நான். எனது சகோதரர் தனது பிறந்தநாளில் எதிர்பாராத விதமாக தனது உயிரை இழந்தார்" என்று அவரது மரணத்தை மற்றவர்களுக்கு தெரிவித்தார்.
கிறிஸ்மஸ் தினத்தன்று, பஃபலோவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது, ஓட்டுநர்கள் மற்றும் அவசர உதவியாளர்களை அவர்களின் கார்களுக்குள் சிக்க வைத்தது.
உள்ளூர் செய்திகளின்படி, புயல் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரத்தை தடை செய்தது.
பஃபலோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிக உயிரிழப்புகளைக் கண்டுள்ளன. தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ, பஃபலோ காவல் துறை ஆன்லைனில் ஒரு கோரிக்கையை வெளியிட்டது. "ஸ்னோமொபைல் வைத்திருப்பவர்கள் மற்றும் உதவ தயாராக இருப்பவர்கள்" ஹாட்லைனை அழைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.