குழந்தையை கடத்திவிட்டு…நிர்வாணமாக தெருவில் ஓடிய பெண்: மனைவியின் செயலால் குழப்பமடைந்த கணவன்
அமெரிக்காவில் 8 வயது சிறுமியை பள்ளி வளாகத்தில் இருந்து தூக்கி கொண்டு ஓடிய பிரிட்டானி ஹர்ட் (34) என்ற பெண், ஆடைகளை கழற்றி நிர்வாணமாக தெருவில் இறங்கிய நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குழந்தையை கடத்திய பெண்
அமெரிக்காவின் இந்தியானாவில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து எட்டு வயது சிறுமியை பிரிட்டானி ஹர்ட்(34) என்ற பெண் தூக்கி கொண்டு ஓடியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கிடையில் பெண் ஒருவர் வேலியின் மீது ஏறி 8 வயது சிறுமி ஒருவரை தூக்கிக் கொண்டு ஓடுவதை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
(Austin Indiana Police)
ஆனால் சிறுமியுடன் நேராக வீடு திரும்பிய பிரிட்டானி ஹர்ட் காரை வீட்டில் நிறுத்திவிட்டு, ஆடைகளை கழட்டி எரிந்து விட்டு ஒரு ஜோடி பைகளை எடுத்துக்கொண்டு நிர்வாணமாக தெருவில் ஓடியுள்ளார்.
இந்த முழு சூழ்நிலையிலும் குழப்பமடைந்த ஹர்ட்டின் கணவர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவரது மனைவி தனது காரின் பயணிகள் இருக்கையில் வேறு குழந்தையுடன் வீடு திரும்பியதாக பொலிஸாரிடம் விளக்கினார் என்றும் WXIN-TV அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பொலிஸார் கைது நடவடிக்கை
மீட்கப்பட்ட சிறுமி பத்திரமாக பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அதிகாரிகள் ஹர்ட்டைப் பின் தொடர்ந்து சென்றார்.
பிறகு அவரை பொலிஸார் கைது செய்தனர், ஆனால் நீதிமன்றப் பதிவுகளின் படி, இந்தியானாவைச் சேர்ந்த பெண் பொலிஸாரின் கார் பின்புற கண்ணாடிகளை உதைத்து ஆடை அணிய மறுத்ததால், அவர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Getty Image)
மேலும் ஹர்ட்டின் தொடர் நடவடிக்கைகள், கடத்தல், குற்றவியல் அத்துமீறல், சட்ட அமலாக்கத்தை எதிர்ப்பது, பொது நிர்வாணம் மற்றும் பொது அநாகரீகம் போன்ற குற்றச்சாட்டுகளை பிரிட்டானி ஹர்ட் சுமத்தப்பட்டுள்ளது.
குழந்தையை கடத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக பள்ளி வளாகம் உடனடியாக பூட்டப்பட்டது என்று ஆஸ்டின் தொடக்கப் பள்ளி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.