கனடா எல்லையில் சிக்கிய பிரித்தானியர்: அமெரிக்க மனைவி கைது
பிரித்தானிய கணவரை கனடா வழியாக அமெரிக்காவுக்குள் கடத்த முயன்ற அமெரிக்கப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடா எல்லையில் சிக்கிய பிரித்தானியர்
ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி, கனடாவிலிருந்து ஒருவர் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆனால், அவர்கள் அவரைத் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், மறுபக்கம், அதாவது கனடாவுக்குள் எல்லையருகே ஒருவர் நடமாடுவதைக் கண்ட கனேடிய பொலிசார் அவரைப் பிடித்து Roosville என்னுமிடத்திலுள்ள எல்லைப் பகுதிக்கு அமெரிக்க அதிகாரிகளிடம் கொண்டு செல்ல, அவர்கள் தாங்கள் தேடும் நபர் அவர்தான் என்பதை உறுதி செய்துள்ளார்கள்.
சற்று நேரத்தில் ஒரு பெண் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைய முயல, அவரை விசாரித்த அதிகாரிகளுக்கு, அவரது கணவர்தான் தாங்கள் பிடித்துவைத்திருக்கும் நபர் என்பது தெரியவந்துள்ளது.
அதாவது, அந்த அமெரிக்கப் பெண்ணின் கணவர் ஒரு பிரித்தானியர். அவரை கனடா வழியாக அமெரிக்காவுக்குள் கடத்த திட்டமிட்டுள்ளார் கலிபோர்னியாவைச் சேர்ந்த அந்தப் பெண்.
அதன்படி அவர் தனது கணவரை கனடாவில் விட்டுவிட்டு, எல்லை தாண்டி தான் மட்டும் அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளார்.
அவர் நடந்தே அமெரிக்காவுக்குள் நுழைந்ததும், அவரை காரில் அழைத்துச் சென்றுவிடலாம் என்பது அந்தப் பெண்ணின் திட்டம்.
ஆனால், இருவரும் அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டதால் அவர்கள் திட்டம் நிறைவேறாமலே போய்விட்டது.
கணவரை அமெரிக்காவுக்குள் கடத்த முயன்ற அந்தப் பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அத்துடன், சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட பின்னரும் மூன்று ஆண்டுகள் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பார் அவர்.
மேலும், அவருக்கு 250,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்படக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |