இந்திய உணவுகளை அசிங்கப்படுத்திய அமெரிக்க எழுத்தாளரின் நிலை என்ன? எழும் கடும் கண்டனம்
இந்திய உணவுகளின் சுவையை கிண்டலடித்த அமெரிக்க எழுத்தாளருக்கு ட்விட்டரில் நெட்டிசன்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல அமெரிக்க நாளிதழில் காமெடி எழுத்தாளராக ஜீன் என்பவர் வேலை செய்து வருகின்றனர்.
இவர் சில நாட்களுக்கு முன் பிடிக்காத உணவுகள் தலைப்பின் கீழ் அவருக்கு பிடிக்காத உணவுகளை பற்றி ஒரு கட்டுரையாக எழுதி இருந்தார். அதில் அவருக்கு இந்தியன் உணவு சுத்தமாக பிடிக்காது என்றும், ஒரே ஒரு வாசனை பொருள்களை கொண்டு இந்திய உணவை தயாரிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து இந்திய செஃப்கள், நடிகைகள் மற்றும் நெட்டிசன்கள் என அனைவரும் டிவிட்டரில் அவரை சரமாரியாக திட்டி வருகின்றனர். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர், மற்றும் சமையல் போட்டியின் நடுவராக பத்மா லட்சுமி ட்விட்டர் பக்கத்தில் ஜீனை கடுமையாக பேசியுள்ளார்.
What in the white nonsense™️ is this? pic.twitter.com/ciPed2v5EK
— Padma Lakshmi (@PadmaLakshmi) August 23, 2021
அவருக்கு முதலில் இந்தியன் உணவு குறித்து கல்வி தேவை.. அடிப்படை சமையல் அறிவே இல்லாத அவருக்கு இந்தியன் உணவின் அருமை எப்படி தெரியும். ஜூனுக்கு நான் The Encyclopedia of Spices and Herbs என்ற புத்தகத்தை பரிந்துரை செய்கிறேன் என்று தகுந்த பதிலடி கொடுத்திருந்தார்.
இதையடுத்து பலரும் ஜீனுக்கு எதிராக தங்களது கருத்துகளை பதிவு செய்து வந்ததால் பிரபல இதழ் இந்திய உணவு குறித்து தவறாக செய்தியை வெளியிட்டதற்கு மன்னிப்பு கூறி செய்தியை மாற்றி அமைத்துள்ளது.