அமெரிக்கா-பிரித்தானியா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம்: மருந்துகளுக்கான அணுகல் அதிகரிப்பு
பிரித்தானியா - அமெரிக்கா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
பூஜ்ஜிய வரி ஒப்பந்தம்
அமெரிக்கா ஏற்றுமதிக்கான பிரித்தானிய மருந்துப் பொருட்கள் மீது பூஜ்ஜிய வரி(Zero Tariffs) மட்டுமே விதிக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்று நிச்சயமற்ற நிலை அதிகரித்த நிலையில், கவலைகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பின் படி, அமெரிக்காவிற்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பூஜ்ஜிய வரியை பெற்ற முதல் நாடு பிரித்தானியா ஆகும்.
பிரித்தானியாவின் பரஸ்பர முடிவு
அமெரிக்காவின் முடிவுக்கு ஈடாக, பிரித்தானியா அரசு பரஸ்பர நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி, தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு சிறப்பு நிறுவனம்(NICE), தேசிய சுகாதார சேவை(NHS) புதிய மருந்துகளை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் செலவு -திறன் அடிப்படை வரம்பை அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த முடிவின் மூலம் செலவு திறன் அடிப்படை வரம்பை NICE 25% உயர்த்த உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |