ஆசியாவின் இந்த நாட்டிற்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்! பயங்கரவாத அச்சுறுத்தல் என அறிவுறுத்தல்
பாகிஸ்தானின் முக்கிய மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் நடந்து வருவதனால், அந்நாட்டுக்கு செல்ல அமெரிக்கர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதல்
ஆசிய நாடான பாகிஸ்தானில் அசாதாரண அரசியல் சூழல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அந்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பயணம் செய்ய வேண்டாம்
அமெரிக்க வெளியுறவுத்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "பயங்கரவாதம் மற்றும் ஆயுத மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாகாணங்கள் இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகிலுள்ள பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்ய வேண்டாம்" என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |