10 சிக்ஸர்.,40 பந்தில் 94 ரன் நாட்அவுட்! உலகக்கிண்ணப் முதல் போட்டியிலேயே சம்பவம் செய்த அமெரிக்கா
டல்லாஸில் நடந்த டி20 உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டியில் கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்கா வீழ்த்தியது.
கனடா, அமெரிக்கா
டி20 உலகக்கிண்ண தொடர் அமெரிக்காவின் டல்லாஸ் (Dallas) நகரில் இன்று தொடங்கியது. கனடாவும், அமெரிக்காவும் முதல் போட்டியில் மோதின.
நாணய சுழற்சியில் வென்று அமெரிக்கா பந்துவீசியது. முதலில் துடுப்பாடிய கனடா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்கள் குவித்தது.
நவ்நீத் தலிவால் 44 பந்தில் 61 ஓட்டங்கள் விளாசினார். அதிரடியில் மிரட்டிய நிக்கோலஸ் கிரிட்டோன் 51 (31) ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் மொவ்வா 32 (16) ஓட்டங்களும் குவித்தனர்.
ஆரோன் ஜோன்ஸ் சிக்ஸர் மழை
பின்னர் களமிறங்கிய அமெரிக்க அணியில் ஸ்டீவன் டெய்லர் (0), மோனக் படேல் (16) சொதப்பினர். ஆனால் ஆரோன் ஜோன்ஸ் மற்றும் அன்ரியஸ் கௌஸ் சிக்ஸர்களை பறக்கவிட்டு அதகளம் செய்தனர்.
குறிப்பாக ஜோன்ஸ் சிக்ஸர் மழை பொழிந்தார். இதன்மூலம் அமெரிக்கா 17.4 ஓவர்களிலேயே 197 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆரோன் ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 40 பந்தில் 10 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்கள் குவித்தார். கௌஸ் 46 பந்துகளில் 65 ஓட்டங்கள் விளாசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |