கடைசி பந்தில் பவுண்டரியால் டை ஆன போட்டி! சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்திய அமெரிக்கா
டி20 உலகக்கிண்ணப் போட்டியில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
டை ஆன போட்டி
அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 159 ஓட்டங்கள் எடுத்தது. பாபர் அசாம் 44 ஓட்டங்களும், ஷதாப் கான் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய அமெரிக்க அணியும் 20 ஓவரில் 159 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது. அணித்தலைவர் மோனக் படேல் 38 பந்தில் 50 ஓட்டங்களும், ஆரோன் ஜோன்ஸ் 26 பந்தில் 36 ஓட்டங்களும் விளாசினர்.
சூப்பர் ஓவரில் வெற்றி
அந்த அணியின் நிதிஷ் குமார் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க, போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
அமெரிக்க அணி முதலில் துடுப்பாடி ஒரு விக்கெட்டு 18 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 5 பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து 12 ஓட்டங்கள் எடுத்தது.
இதனால் அந்த அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ஒரு ரன் மட்டுமே எடுத்ததால் அமெரிக்கா 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |