பாகிஸ்தானின் விடுதலை குழு ஒன்றை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா! உறுதிப்படுத்திய ரூபியோ
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் விடுதலை இராணுவத்தை பயங்கரவாத குழுவாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அணு ஆயுத தாக்குதல் மிரட்டல்
அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள இராணுவ தளபதி அஸிம் முனிர், அணு ஆயுத தாக்குதல் மிரட்டல் விடுத்தது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் BLA என்ற அமைப்பு அமெரிக்காவின் கண்காணிப்பில் பல ஆண்டுகளாக உள்ளது. பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் எனும் இந்த அமைப்பிற்கு மஜீத் படைப்பிரிவு எனும் மாற்றுப் பெயரும் உள்ளது.
2019ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பானது பல தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது. குண்டுவெடிப்புகள், உயர்மட்ட தாக்குதல்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
குறிப்பாக, 2024ஆம் ஆண்டு கராச்சி விமான நிலையம் மற்றும் குவாதர் துறைமுக அதிகாரசபை வளாகத்திற்கு அருகில் நடந்த தாக்குதல்களுக்கு BLA பொறுப்பேற்றது. இதுபோன்ற வன்முறை நடவடிக்கைகளின் காரணமாக அமெரிக்கா BLA அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
கொடிய தாக்குதல்களுக்குப் பிறகு
இதுதொடர்பான அறிக்கை ஒன்றில், BLAயின் வன்முறை நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்பைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன மற்றும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கின்றன என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தானில் நடந்த பல கொடிய தாக்குதல்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மார்கோ ரூபியோ (Marco Rubio) குறிப்பிட்டார்.
பல தசாப்தங்களாக அரசுக்கு எதிராக கிளர்ச்சியை நடத்தி வரும் BLA அமைப்பை பாகிஸ்தானும் பயங்கரவாத குழுவாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |