அமெரிக்க இளைஞன் செல்போனில் இருந்த கண் தெரியாத, வாய் பேசமுடியாத பெண் வீடியோக்கள்! அம்பலமான பின்னணி
அமெரிக்காவில் பார்வையில்லாத, பேசமுடியாத, காது கேட்காத பெண்ணுக்கு நடந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மோண்ட்கோமரி கவுண்டியை சேர்ந்தவர் மால்குயின் கிரைக் (23). இவர் 70 வயதான பார்வையில்லாத, பேசமுடியாத, காது கேட்காத பெண்ணிடம் கடந்த 2020 மற்றும் 2021 காலக்கட்டத்தில் பல தடவை அத்துமீறி தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.
இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் பொலிசார் கிரைக்கை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கிரைக்கின் பராமரிப்பில் இருந்த போதே இந்த சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பான வீடியோக்களும் கிரைக்கின் செல்போனில் இருந்துள்ளது. கைது செய்யப்பட்ட கிரைக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஜாமீன் தொகையாக $500,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.