மணமேடையில் இந்திய பெண் கையை பிடித்து அக்னியை சுற்றி வந்த அமெரிக்க இளைஞர்! பாரம்பரிய முறையில் திருமணம்
இந்தியாவை சேர்ந்த இளம்பெண் அமெரிக்க நாட்டு இளைஞரை பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் திருப்பதியைச் சேர்ந்தவர் ஜெயசந்திரா. இவர் மனைவி ராஜேஷ்வரி. தம்பதியின் மகள் ஹர்ஷவி பி.டெக் முடித்து அமெரிக்காவில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு பொது மேலாளராக பணியாற்றும் அமெரிக்காவை சேர்ந்த டொமியன் பிராங்க் என்ற நபருடன் ஹர்ஷவிக்கு காதல் ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவிலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால், மாப்பிள்ளை டொமியன் பிராங்க் இந்தியாவில் இந்து முறைப்படி திருமணத்தை நடத்த விரும்பியதால், இவர்களது திருமணம் திருப்பதியில் இருவீட்டாரின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பிராங்கின் தந்தை ஸ்காட், தாய் அன்னா மற்றும் சகோதரர், அண்ணியும் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினார்கள்.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.