ரஷ்யா தவறினால் அத்தகைய நடவடிக்கைகள் சாத்தியமாகும்: எச்சரித்த அமெரிக்கா
போர்நிறுத்த நிபந்தனை குறித்த முறையான திட்டத்தை ரஷ்யா வழங்கத் தவறினால், கூடுதல் தடைகளுக்கு உள்ளாக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இணைந்து பணியாற்ற தயார்
ரஷ்யா, உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நாங்கள் ரஷ்யாவை நம்ப தயாராக இல்லை, முதல் நடவடிக்கையாக போர்நிறுத்தம் வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறினார்.
அதே சமயம் எதிர்கால அமைதி ஒப்பந்தம் குறித்த ஒரு குறிப்பாணையில், உக்ரைனுடன் இணைந்து பணியாற்ற ரஷ்யா தயாராக இருப்பதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார்.
மார்கோ ரூபியோ
இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ செனட் வெளியுறவுக் குழுவின் முன் பேசியபோது,
"ரஷ்யாவின் இத்தகைய தாமதம் இந்த விடயத்தில் பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோவின் உண்மையான நோக்கத்தைக் காட்டும். போர்நிறுத்தத்தை எட்டுவதற்கு என்ன தேவை என்பதற்கான விதிமுறைகளை ரஷ்யர்கள் எழுதப் போகிறார்கள் என்பது எங்கள் புரிதல். அது பின்னர் பரந்த பேச்சுவார்த்தைகளை அனுமதிக்கும்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "நாங்கள் அந்த விதிமுறைகளுக்காக காத்திருக்கிறோம். பின்னர் அந்த விதிமுறைகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்த்தவுடன் திரு.புடினின் கணக்கீடு பற்றி எனக்கு மிகச் சிறந்த புரிதல் கிடைக்கும். ரஷ்யா அமைதியைத் தொடர் விரும்பவில்லை என்றாலோ, போர் முயற்சியைத் தொடர்ந்தாலோ கூடுதல் தடைகள் என்ற நடவடிக்கைகள் சாத்தியமாகும்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |