கத்தார் உலகக்கோப்பையில் பிரித்தானிய அணிகளுக்கு கிலி கொடுத்த அமெரிக்கா! round of 16 சுற்றுக்கு முன்னேற்றம்
ஈரான் அணியை வீழ்த்தியதன் மூலம் Round of 16 சுற்றுக்கு அமெரிக்கா முன்னேறியுள்ளது.
கிறிஸ்டியன் புலிசிக்
கத்தார் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின.
பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியின் 38வது நிமிடத்தில் அமெரிக்காவின் கிறிஸ்டியன் புலிசிக் அபாரமாக கோல் அடித்தார்.
இதன்மூலம் முதல் பாதியில் அமெரிக்கா முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் ஈரானின் கோல் முயற்சிகளை அமெரிக்கா தடுத்தது. இறுதியில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
@AP Photo/Manu Fernandez
Round of 16
ஏற்கனவே இங்கிலாந்து, வேல்ஸ் அணிகளுடன் டிரா செய்த அமெரிக்கா இந்த வெற்றியின் மூலம் 5 புள்ளிகளைப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
@Odd Andersen/Agence france-presse-Getty Images
குரூப் B பிரிவில் இருந்து இங்கிலாந்து (7 புள்ளிகள்), அமெரிக்கா (5 புள்ளிகள்) round of 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
Your final Group B standings ? @USMNT join @England in the knockout stages ?? ???????
— FIFA World Cup (@FIFAWorldCup) November 29, 2022