அமெரிக்காவின் மிக வயதான பெண்ணான எலிசபெத் காலமானார்: அவர் கொடுத்த வாழ்க்கை குறிப்பு
அமெரிக்காவின் மிக வயதான பெண்ணான எலிசபெத் பிரான்சிஸ் 115 வயதில் உயிரிழந்தார்.
எலிசபெத் பிரான்சிஸ்
1909ஆம் ஆண்டில் லூசியானாவில் பிறந்தவர் எலிசபெத் பிரான்சிஸ். இவர்தான் அமெரிக்காவின் மிக வயதான பெண்ணாக அறியப்பட்டார். அதற்காக கடந்த பிப்ரவரி மாதம் நாட்டின் வயதான நபராக முடிசூட்டப்பட்டார்.
இவருக்கு முன் கலிபோர்னியாவின் எடி செக்கரெல்லி தனது 116வது பிறந்தநாளுக்கு சில வாரங்களுக்குப் பின் இறந்தார்.
மேலும், ஏப்ரல் மாதம் LongeviQuestயில் இருந்து அமெரிக்காவில் மிகவும் வயதான நபராக அங்கீகரிக்கும் விருதையும் எலிசபெத் பிரான்சிஸ் பெற்றார்.
இவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை டெக்ஸாஸின் ஹூஸ்டனில் கழித்தார். முதல் உலகப்போரில் இருந்து டைட்டானிக் கப்பல் மூழ்கும் வரை அனைத்தையும் அறிந்திருந்தார்.
வாழ்க்கை குறிப்பு
காபி கடை ஒன்றை ஹூஸ்டனில் நடத்தி வந்த எலிசபெத், வாகனம் ஓட்டுவதை விட நடைப்பயிற்சி செய்வதை அதிகம் விரும்பினார்.
இவர் அமெரிக்காவில் 20 ஜனாதிபதிகளின் ஆட்சியை கண்டுள்ளார். இந்நிலையில் எலிசபெத் தனது 115 வயதில் உயிரிழந்துள்ளார்.
முன்னதாக இவர் தனது பிறந்தநாளின்போது நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது குறித்த குறிப்பை வழங்கினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |