பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதல்: மூன்று படகுகளில் 8 பேர் பலி
அமெரிக்க இராணுவம் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் மூன்று படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று படகுகள்
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் இராணுவ நடவடிக்கை குறித்து கேள்விகள் அதிகரித்து வரும் நிலையில், பசிபிக் பெருங்கடலில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. 
அமெரிக்க இராணுவம் மூன்று படகுகள் மீது நடத்திய இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், "இந்தத் தாக்குதல்கள் குறிப்பிடப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை குறி வைத்து நடத்தப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயங்கரவாதம்
இதில் முதல் படகில் மூன்று பேரும், இரண்டாவது படகில் 2 பேரும், மூன்றாவது படகில் மூன்று பேரும் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை அது வழங்கவில்லை.
இந்த நடவடிக்கையானது, அமெரிக்காவில் போதைப்பொருள் பயங்கரவாதம் என்று குற்றம் சாட்டப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி மதுரோ மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |